பந்தார் விரலி
"ஜானகி! என்கிட்ட போடு! நான் பிடிச்சிடுவேன்!" "அக்கா, அவள் பிடிக்க மாட்டாள்!" ஜானகி அவளின் ஆசை தங்கையை பார்த்து சிரித்தாள். "ஏண்டா மிலி, நீ மட்டும் பிடிச்சிடுவியா?" மிலியின் குறும்பு மிக்க சிரிப்பு அடங்கி மற்ற தோழிகள் ஜானகியுடன் சேர்ந்து சிரித்தார்கள். அப்பொழுது ஜானகி அவள் கைகளில் மிகவும் வசதியாக உட்கார்ந்திருந்த என்னை பார்த்து சிரித்தாள். என்னை ஒரு முறை தடவி காதருகில் எடுத்துக் கொண்டு சென்றாள். "யார் கிட்ட போடுவது, உன்னை? நீயே சொல்லேன்?" என்று மெல்லிய குரலில் கேட்டாள். அவளின் அழகான தாமரை கைகளும், சந்தோஷம் மிகுந்த சிரிப்பும், அன்பு பொங்கும் கண்களை விட்டு செல்ல வேண்டாம் என்று தோன்றினாலும் என் கடமை அப்படி இப்படி போட்டு போட்டு விளையாடுவதற்குத்தானே என்று என்னையே தேர்த்திக் கொண்டேன். சிறிது நேரத்தில் மிலியோ மற்ற தோழிகளில் யாராவது ஜானகியிடம் திரும்பியும் தூக்கிப் போடுவார்கள் தானே! "ஜானகி, இங்கே!" ஜானகி திடீர் என என்னை ஒரு குபுக் சிரிப்புடன் மேலே ஓங்கி தூக்கிப் போட்டாள். அப்படியே காற்றில் சுற்றி சுற்றி பறந்து, நந்தவனம், துர்கை அம்மன் கோவில், ஆ...