Posts

Showing posts from May, 2025

ஜாக்கிரதை!

பார்துவின் நிம்மதியான நான்கு வருட திருமண வாழ்வில் மிகவும் கோரமான ஒரு திருப்பம் நேர்ந்து விட்டது . அவனுக்கு வாழ்க்கையை வாழ இஷ்டமே இல்லாமல்  ஆக்கி விட்டது . 'போலீசாக இருந்தது போதும்' என்ற திடீர் வைராக்கிய உணர்வோடு ராஜா ரவி வர்மாவை போல் சித்திரம்  செய்யவேண்டும் என்ற  திடீர் ஆர்வம்  கொண்டு   விஜயநகரத்தில் ஓரளவுக்கு வசதியான இரண்டு மாடி வீட்டிற்கு ஏழு மாதங்கள் வாடகை கட்ட இயலாமல் துளைத்து, இரண்டு வாரங்களுக்கு முன் பார்துவின்   தந்தையின் ராசியான விசாகபட்டணம் வீட்டின் வாசலில் வந்து நின்றிருந்தார்கள் பார்துவின் அக்காவும் மாமாவும்.  இவர்களில்  இந்த விஷமம் எல்லாம் செய்தது மிஸ்டர் பாவா. பார்துவின் அக்கா பத்து என்றவள், சற்று பாவம்தான், ஆனால் காட்டிக்கொடுக்கமாட்டாள் . போலீஸ் ஸ்டேஷனில் போரென்சிக் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை செய்து எப்படியோ குடும்பத்தை நடத்துகிறாள். இந்த திருப்பம் ஏன் பார்துவிற்கு அவ்வளவு கோரமாக இருந்ததற்கு விளக்கம், கீழே காணப்படும் நள்ளிரவு வசனத்தினால் தெரியப்படும் . காட்சி நடக்கும் இடம்; பார்துவின் படுக்கை அறை. பேசும் பாத்திரங்கள்; பார்து, பார்துவின்...