Posts

Showing posts from November, 2023

திருமணக் கொள்ளை

மணம்  அவர்களின் திருமணம் மிகவும் எளிதாக நடந்து முடிந்தது. சடங்குகள் முழுக்க முழுக்க இருவரும் ஒருவரின் ஒருவர் காதுகளை கடித்துக் கொண்டே இருந்தார்கள். அம்முவின் தாய் தந்தையர் தங்களுக்குள் சிரித்து வியந்தார்கள். "என்ன இது, இந்த இரண்டும் இப்படி பேசிக்கொண்டே இருக்கிறார்கள்?" "இப்படியே வாழ்நாள் முழுவதும் இருந்தால் நல்லது." அவள் அவனின் காதுகளில் எதையோ சொல்லி அவன் குபுக்கென்று சிரித்த விதம் அம்மாவை இன்னமும் மகிழ வைத்தது. "அந்த கவலை தேவையே இல்லை. இவர்களுக்கு நிறைய பேச இருக்கிறது. இந்த காதல் சாதாரணமாக ஓயாது." சடங்குகள் எல்லாம் முடிந்து முதல் இரவிற்கு அம்மா அவளிடம் ஒரு சின்ன குவளையில் பால் கொடுத்தாள். அம்மு அவசரமாக கிளம்ப நடுவில் அந்த பக்கமாக வந்த அப்பா அவளை நிறுத்தி, அவளின் முடியை மெல்ல தடவிக்கொடுத்தார். "என் செல்ல மகள், தவமாய் தவமிருந்து கிடைத்த என் பொக்கிஷம். இவன் என்ன தவம் செய்தானோ உன்னை பெறுவதற்கு!" என்று இனிய வாழ்த்து கூறி அவளை அணைத்தார். அந்த அணைப்பில் அவளின் காதுகளில் இரண்டு சொட்டு கண்ணீர் பட்டது. அவரை பார்த்து பெரிதாக சிரித்து, அவரின் கால்களில் விழு...

பூனை நண்பன் 

"இவன் தானா?" "இவனாகத்தான் இருக்கனும்." "பார்த்தா அப்படி தெரியலையே? நல்லா படிக்கற பையன் மாதிரி தானே..." "அட, அவன் அப்பன் என்ன சொன்னான்னு மருந்துட்டியா?" மாரி தன் மீசை வைத்த நண்பன் முத்துவை பார்த்து முறைத்தான். "அந்த ஆளோட கேனத்தனமான பார்வை இவன் கிட்ட இருக்கே?" "ஆமாம். இந்த ஊர்ல பிசினஸ்மேன் லேர்ந்து டீ கடை காரன் வறைக்கும் எல்லாரும் தான் கேனத்தனமா பார்ப்பானுங்க. எல்லாருமே அந்த ஆளோட பசங்களா?" "போதும். நிறுத்து." மாரி முத்துவின் மீசையை மோசமாக கிள்ளி விட்டு எழுந்தான். "ஆ!" "இங்கேயே வலில துடிச்சிண்டு இரு. தோ வந்துடறேன்." மாரி எதிரில் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த இளைஞனிடம் நடந்தான். அந்த இளைஞன் ஆவேசமாக நகங்களை கடித்துக்கொண்டு தன் காலேஜ்ஜிலிருந்து வெளி வரும் ஆட்களை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருந்தான். "தம்பி?" அவன் மாரியை திரும்பி மேலும் கீழும் பார்த்தான். வேறொரு பக்கம் முகத்தை திருப்பி நகத்தை துப்பினான்.  "என்ன வேணும் உங்களுக்கு?" அந்த இளைஞனின் முகம் இப்பொழுது நேராக பார்க்கையில் அவன் பார...