Posts

Showing posts from October, 2023

முப்பெரும் தேவர்

வியாழக்கிழமை, காலை நான்கு முப்பது மணிக்கு திருவொற்றியூர் கடற்கரை அருகினில் இருந்த பட்டினத்தார் ஆலயத்திற்கு எதிரில் இருந்த பட்டினத்தார் கோவில் தெரு சாந்தமாக இருந்தது. ஆறு, ஏழு மணிக்கு மேல்தான் எல்லோரும் விழித்து, குளித்து, தெருவோர கடையில் ஒரு பால் பாக்கெட் வாங்கி, அவசரமாக காஃபியோ பூஸ்ட்டோ போட்டு குடித்துவிட்டு ஆஃபிசுக்கும் ஸ்கூலிற்கும் கிளம்புவார்கள். அந்த தெருவில் ஒருவன், அவனுடன் சேர்ந்து மற்ற இருவரும் வேண்டா வெறுப்பாக எழுந்துகொண்டார்கள். "பத்ரிஈஈ! தூக்கம் வருது டா!" தலை வாரிக் கொண்டே, கண்ணாடி வழியாக பதில் அளித்தான் பத்ரி. "தூங்கு. உன்னை யாரு எழுந்துக்க சொன்னாங்க இப்ப?" "நீ லைட்டை ஆன் பண்ணிண்டிருக்கியே!" பைரவன் கண்களை இறுக்கி மூடிய படி எழுந்தான். "ச்ச, இப்ப நைட் டைம் வறைக்கும் தூக்கம் வராது." பத்ரி சிரித்து  அறையை விட்டு வெளியேறினான். பைரவன் தன் பக்கத்தில் மூஞ்சியை மூடி படுத்திருந்த பாரதியை பார்த்தான்.  "இவனுக்கு மட்டும் என்ன சுகம், எழுந்திரு டா!"  போர்வையை பிடுங்கிப் போட்டான். பாரதியின் இளைய முகம் வெளி வந்தது. லைட்டின் வெளிச்சத்தில் அ...

கோதாவரி கோங்குரா - சுவர்ண யக்நோபவீதம்

கீதாஞ்ஜலி இந்த கதை பத்ராசலம் சினிமா தியேட்டரில் தொடங்குகிறது. சண்டி அந்த புது அவெஞ்ஜர்ஸ் படம் பார்க்க ஆசை பட்டான். எனக்கு, கீதாஞ்ஜலி. அது பழைய படம்தான். இந்த சினிமா தியேட்டரில் செண்டிமெண்ட்டாக மாதத்திற்கு ஒரு முறை அதை காட்ட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது போல். இந்த வருடம் எழு முறை காட்டி விட்டார்கள். நானும் இரண்டு முறை பார்த்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த படம், இன்றைக்கும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. ஏங்கும் கண்களுடன் சண்டி அந்த அவெஞ்ஜர்ஸ் படப் போஸ்ட்டரை பார்த்துக்கொண்டிருந்தான். நான் அவனின் காலை இழுக்க "ஓ, பிரியா பிரியாஆஆஆ" என்று அவன் காதில் பாடினேன். "சீ! நோ வே! ஏஜ் ஆஃப் அல்ட்ரோன் பார்த்தே ஆகனும்!" "ஆமாம், ஆமாம். அந்த ஆஸ்திரேலியன் இருக்கான் இல்லை?" "அவனும் இருக்கான் சரி. ஆனால் கதை நல்லா இருக்குமே!" நான் சிரித்தேன். என் பைசாவை அவனிடம் கொடுத்தேன். "உனக்கு பிடிச்ச படத்துக்கு டிக்கெட் வாங்கிண்டு வா. போ, ரா!" ஓடாத குறையாக அவன் கௌண்ட்டரிற்கு சென்ற பொழுது நான் ஒரு பெரிய கூட்டத்தில் மாட்டிக்கொண்டேன். திருப்பதிக்கு நான் போனதில்லை. ப...

பட்டாம்பூச்சிகள்

அண்ணிக்கும் அண்ணனுக்கும் நிறைய வயது கிடையாது ஆனால் நறை முடிகள் இப்பொழுதே காதுகளின் அருகில் நடனம் ஆடியது. எல்லாம் சந்துருவினால்தான். முதல் பையனின் கல்யாணமான இரண்டு மாதங்களில் சந்துருவின் அப்பா அம்மா ஸிட்டி வாழ்க்கை வேஸ்ட்டென்று சொல்லிவிட்டு பெட்டி படுக்கைகளோடு சொந்த ஊரிற்கு (மதுராந்தகம்) ஓடி விட்டார்கள். இப்பொழுது சந்துருவின் வாழ்க்கை அவன் கையில் இல்லாமல் அவனின் அண்ணன் அண்ணியின் கைகளில் விழுந்து விட்டது. அவர்கள் இருவரும் ஒரே சாப்ட்வேர் கம்பெனியில் வேளை செய்தார்கள். வசதியான போக்கு வரத்து. சில சமயம் அண்ணன் ஸ்கூட்டி ஓட்டுவான், சில சமயம் அண்ணி ஓட்டுவாள். ஒரே ஹெல்மெட் இருந்த படியால் நிறைய சமயம் அண்ணியே ஓட்டுவாள்.  "ட்ச, ஐ காண்ட் கீப் டூவிங் திஸ். இன்னொரு ஹெல்மெட் வாங்கியே ஆகனும்." "ஏன், இப்ப உனக்கு என்ன கஷ்டம்?" "நீங்க சொல்லிட்டீங்க, நான்தானே போலீஸ் காரங்க கிட்ட மாட்டினா கெஞ்சனும், சார் விட்டுடுங்க பிளீஸ் அப்படின்னுட்டு. நீங்க ஒரு நாள் போய் பண்ணி பாருங்க, மானம் போய்டும். ஹும்!" "செரி, செரி. சாரி. கூடிய சீக்கிரத்தில் ஹெல்மெட் வாங்கிக்கலாம்!" அது ஆறு மாத...