Posts

Showing posts from February, 2024

லல்லியின் பெயர்

"அம்மா..." "என்னடா?" "வேண்டாம், உனக்கு பதில் தெரியாது. அப்பா..." "என்னடி இப்படி சொல்லிட்டே!" அம்மா அவளைப் பார்த்து முறைத்ததில் பொய் பயத்துடன் அப்பாவை கட்டிண்டாள் லல்லி. அப்பா அவள் தலையை தட்டினார். "அம்மாவை எது வேணும்னாலும் கேட்கலாம். அவங்களுக்கு எல்லாம் தெரியும்." அம்மா அவளின் ஆசைக் கணவரைப் பார்த்து வெறுப்புடன் சிரித்தாள். "எல்லாம் தெரியாது. ஆனால் உன் கேள்வியை என்கிட்ட கேட்டுத்தான் பாரேன்?" லல்லி அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்திருந்தவனை உற்று பார்த்தாள். வெள்ளையாக, தலை முடியும் தோல் நிறமும் சேர்ந்து கொள்ள, ஒல்லியாக, நீட்ட மான கால்களை கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டில் அடக்கி, இளமஞ்சள் முடிக்கு நேர் எதிராக அலங்கரித்த கருப்புக் கண்ணாடியும் தலையுமாக, மிகவும் தீவிரமாக ஃபோனை சாய்த்து வைத்து இரண்டு கட்டை விரல்களாலும் நோண்டிக் கொண்டிருந்தான்.  "அவன் யாரும்மா?" அம்மா முழித்ததை அப்பா பார்த்து வாயைப் பொத்திக்கொண்டார். "சொல்லேன் மா. குழந்தை கேக்கறால்லை?" "எனக்கு எப்படி தெரியும், அந்த வெள்ளைக்காரப் பையன் யாருன்னு?" சுற...

கிருஷ்ணவேணிக்கோர் காதல் கதை

கிருஷ்ண நிவாசம் அடையாறு, அந்த இரவு நேரத்தின் நிலவு, "சீயர்ஸ்!" என்ற இரண்டு குவலைகளின் அழகான முத்தம், அதனின் உள்ள பீயரும் ஐஸ் கட்டிகளும் ஒன்றை ஒன்று அடித்து, கிளாஸில் சரிந்து விழுவதின் சத்தம் மாடியில் தன் படுக்கையில் படுத்திருந்த கிருஷ்ணவேணிக்கு அனாவசியமாக கேட்டது. திரும்பி தன் பக்கத்தில் படுத்திருந்த அம்மாவை பார்த்தாள். ஒரு ஆங்கில புத்தகமும் கையுமாக இருந்தாள். அம்மா எப்பொழுதும் படிக்கும் பொழுது வைத்திருக்கும் உம்மூஞ்சி இப்பொழுதும், அவள் தலையணை பக்கத்தில் இருந்த சிறிய விலக்கினால் தெரிந்தது. கிருஷ்ணவேணி சிரித்து அம்மாவின் நீட்டியிருந்த கீழ் உதடை பிடித்துக்கொண்டாள். "என்னங்க, இவ்வளவு உறக்கா குடிக்காதீங்களேன்? ராத்திரி நேரம் அதுவுமா!" என்று அம்மாவின் வாயை பிதுக்கி அசைத்து அவள் பேசினாள். புருவங்களை சேர்த்துக் கொண்டு அம்மா அவளின் கையை தள்ளினாள். "என்னடி செய்யறே, தூங்காம?" "அப்பா குடிச்சிண்டு இருக்கார்." "அதுக்கென்ன இப்போ?" கிருஷ்ணவேணி திரும்பி தொப்பையில் படுத்துக்கொண்டாள். நகங்களை மிகக் கொடுமையுடன் பிசைத்தாள். "அந்த வெள்ளைக்காரனோட போய்....