அணுவின் ஆள்
தேர்ந்தெடுத்தல் மைலாப்பூர் மாதவப்பெருமாள் கோவில் தெருவில் வாழ்ந்த சடகோபாச்சாரியின் மகன் ராஜகோபால் அலியாஸ் 'ராஜு'வை காலேஜ்ஜில் சந்தித்திருக்கக்கூடாது... அவனுடன் பேசியிருக்கக்கூடாது... அவனிடம் ஸ்பேர் பென்சில் வாங்கியிருக்கக்கூடாது. இப்பொழுது பாருங்கள்? அந்த பென்சிலை வைத்துத்தான் மீண்டும் மீண்டும் நோட்டு புத்தகங்களில் இயல்பியல் சமன்பாடுகளுக்கு அருகில் ' அனகா ராஜகோபாலன்' என்று வித விதமான கையெழுத்து பயிற்சி செய்துவிட்டேன். ஒரு எக்ஸாம் பேப்பரின் கவர் ஷீட்டில் கூட அதே பென்சிலை வைத்து என் தந்தையின் அழகான பெயரான ராமசந்திரனுக்கு பதிலாக என் மனதில் அவ்வளவு இலவசமாக குடியிருந்தவனின் பெயரை எழுதிவிட்டேன். நல்ல வேலை, என் வளைவு எழுத்து பழக்கத்தினால் முதல் எழுத்தான 'ஆர்' தெரிந்ததே தவிர, வேறு எதுவும் புரியவில்லை. ஆமாம், இதில் என்ன அவ்வளவு பெரிய சிக்கல் என்று கேட்காதீர்கள். பேப்பரை திறுத்தியவர் ராஜுவின் தந்தை இயல்பியல் பிரபஸர் சடகோபாச்சாரி. ராஜுவின் அண்ணன் பள்ளிக்கூடத்தில் கண் முன்னால் எண்களும் எழுத்துகளும் பறக்குகிறது என்று சொல்லி அழுத பொழுது அவனின் டிஸ்லெக்சியா மீது கோபம். இப்பொ...