Posts

Showing posts from May, 2026

நான், மாதவ்

 "உலகத்திற்கு என் வணக்கங்கள்." "இந்த voice சரியில்லை. திரும்பவும் try பண்ணு." "உலகத்திற்கு என் வணக்கங்கள்." "ச்ச,  சுப்பு ஞாபகம் வருது." "What is wrong with  சுப்பு ?" அர்ஜுன் கொஞ்சம் அதிகமாகவே குழைந்தான். " Nothing wrong, just..." அர்ஜுன் சட்டென்று அவனையே நிறுத்தி அவன் நோண்டிக்கொண்டிருந்த கம்பியூட்டரை பார்த்து கண்களை சுருக்கிக்கொண்டான். " வேலைய பாரு, மாதவ். ம்ம், வேற voice." "என்னடா? யாரோட பேசிண்டிருந்தே?" "அம்மா! Meet மாதவ்!"  "Hi, Miss அம்மா." "மாதவ், voice மாத்துன்னு சொன்னேன் இல்லை?" "என்ன voiceன்னு சொல்லலை." "பேச ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷம் ஆகலை, அதுக்குள்ள..." "இருடா!" கம்பியூட்டரை பார்த்து அம்மாவும் கண்களை சுருக்கிக்கொண்டாள், குழப்பத்துடன். "யாரு மாதவ்? கம்பியூட்டரா?" "எஸ், என் engineering machine learning finalக்கு சொந்தமா நான் design பண்ண AI bot." "Multi-Agent Data Heuristic and Analytic Vessel." "என்னடா,...